Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 21, 2019

இலவச லேப்டாப்: மாணவர்களுக்கு என்ன பலன்.! ஆதாரத்தை காட்டுங்க-மத்திய அரசு.!

தமிழக அரசு சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக இலவச லேப்டாப் பள்ளி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக லேப்டாப் பெறும் மாணவர்களின் சுய விவரங்கள், கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற் செய்யப்படுகிறது.பயன் அடைந்துள்ளார்களா?
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால் மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்களா என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இலவச லேப்டாப் வாங்கிய மாணவர்களிடமிருந்து 15 வகையான தகவல்களை பெற வேண்டும் என்று, அனைத்து
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுயதொழில் செய்கிறாரா?
குறிப்பாக லேப்டாப் வாங்கி மாணவர்கள் தற்போது படிக்கிறாரா? சுயதொழில் செய்கிறாரா? என்ற விவரங்களை சேகரிக்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. பின்பு லேப்டாப்பை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா? அல்லது லேப்டாப்பில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா? என்பதை மாணவர்கள் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பழுது ஏற்பட்டதா?

பின்பு ஓராண்டுக்குள் லேப்டாப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டதா? லேப்டாப்பை மாணவர்கள் விற்றுவிட்டார்களா? உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் பதிவு செய்ய மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News