Join THAMIZHKADAL WhatsApp Groups
பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு முதன் முறையாக தனியார் நிறுவனமான டிசிஎஸ் மூலம் நடத்தப்பட உள்ளது. பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை நேற்று தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் சுமார் 15000 விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ளன. விண்ணப்பங்களை ஆன்லைன் கலந்தாய்வுக்கு பதிவு செய்ய கடைசி தேதி மே 31 ஆகும். இதற்கு பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிய உள்ளனர். மற்ற மாணவர்களுக்காக மாநிலம் எங்கும் 42 மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இவ்வாறு பதிவு செய்த மாணவர்களுக்கு பதிவு குறித்த விவரங்கள் ஈ மெயில் மற்றும் எஸ் எம் எஸ் மூலம் அனுப்பட உள்ளன. இந்த வருடம் சுமார் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பதியப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்த உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் முறையாக தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த பணி டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) மூலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு இரு கட்டமாக நடைபெற உள்ளது. இது தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட உள்ளது.