Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 15, 2019

உலகின் முதல் மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப் அறிமுகம் செய்த லெனோவா.!

lenovo just debuted the world s first foldable display laptop and it looks intriguing.உலகின் முதல் மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப் சாதனத்தை லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


சமீபத்தில் சாம்சங் நிறுவனம் உலகின் முதல் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு போனை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது உலகின் முதல் மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப் சாதனத்தை லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உலகின் முதல் மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப்


நேற்று நடைபெற்ற ஆக்சிலரேட் கலந்தாய்வில், பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான லெனோவா நிறுவனம் உலகின் முதல் மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப் மாதிரியின் டிசைனை அறிமுகம் செய்துள்ளது. இன்னும் இந்த மாடலுக்கான பெயரை லெனோவா நிறுவனம் தெரிவிக்கவில்லை.
திங்க்பேட் எக்ஸ்1 சீரிஸ்


இந்த உலகின் முதல் மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப் மாடல் லெனோவா நிறுவனத்தின் திங்க்பேட் எக்ஸ்1 சீரிஸ் லேப்டாப்களுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் விற்பனை
இன்னும் அதிகப்படியான சோதனைக்குப் பின், மடக்கக்கூடிய டிஸ்பிளே லேப்டாப் எக்ஸ்1 சீரிஸ் மிக விரைவில் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்றும் லெனோவா தெரிவித்துள்ளது.


13.3' இன்ச் கொண்ட OLED 2K டிஸ்பிளே
மடக்கக்கூடிய இந்த டிஸ்பிளே லேப்டாப் 13.3' இன்ச் கொண்ட OLED 2K, 4:3 விகித டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாதியாக மடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, பாதியாக மடிக்கும் போது இரண்டு 9.6' இன்ச் டிஸ்பிளேயாக மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News