Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 21, 2019

கடற்படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் பணி


கடற்படையில் கமிஷன் ஆபீஸர் (எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் எஜூகேசன் பிராஞ்ச், டெக்னிக்கல் பிராஞ்ச்) ஜூன் - 2020 என்ற பயிற்சியில் சேர, திருமணமாகாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன.
மொத்த காலியிடங்கள்: 121



துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எக்சிகியூட்டிவ் பிரிவு - 55
2. டெக்னிக்கல் பிரிவு - 48
3. கல்வி பிரிவு - 18

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19½ முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1995 மற்றும் 01.01.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 02.07.1995 மற்றும் 01.07.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.



தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பெற்றிருக்க வேண்டும்.

உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி. மூலம் நடத்தப்படும் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலை தேர்வுகள் மற்றும் நுண்ணறிவுத் தேர்வு, கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வுகளவ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindian navy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது விண்ணப்ப பிரதியுடன் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.



மேலும் விரிவான விவரங்களை www.joinindian navy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2019

Popular Feed

Recent Story

Featured News