Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 20, 2019

திணை(THINAI), பால்(PAAL), எண்(EN), இடம்(IDAM), காலம்(KAALAM)

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



WATCH VIDEO AND CLICK DOWNLOAD
சொல் இலக்கணத்தின் அடிப்படைகள்

திணை(THINAI), பால்(PAAL), எண்(EN), இடம்(IDAM), காலம்(KAALAM) என்பன சொல் இலக்கணத்தின் அடிப்படைகளாகும்.

திணை

திணை என்பது, ஒழுக்கம், நாகரிகம், பிரிவு, குலம் இனம் முதலான, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகும்.

சொல் இலக்கணத்தில் அமைந்த திணை என்ற சொல், பிரிவு என்ற பொருளில் அமைகிறது.

இத்திணை, உயர்திணை, அஃறிணை என இரண்டு வகைப்படும்.

உயர்திணை

உயர்திணை என்பது பகுத்தறிவு கொண்ட மக்கள், தேவர், நரகர் ஆகிய மூவரையும் குறிக்கும்.

மக்கள் – ஆண் பெண்

தேவர் – கந்தன் திருமால், வள்ளி

நரகர் – அரக்கண், சூரன்

அஃறிணை

அஃறிணை என்பது மக்கள், தேவர், நரகர் அல்லாத பிற உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களைக் குறிக்கும்.

உயிருள்ள அஃறிணை பொருட்கள் – மரம், மயில், பசு

உயிரற்ற அஃறிணை பொருட்கள் – காற்று, மலை, கடல், தலை, கை, கால்

இவற்றில் தலை, கை, கால் என்ற மனித உறுப்புகளும் அஃறிணையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

மனிதன் உயர்திணையில் அமைந்திருக்க அவனது உடல் உறுப்புகள் மட்டும் எப்படி அஃறிணை ஆயின என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்.

ஏனெனில், ஒட்டு மொத்த மனிதனைக் குறிக்கும் போது மட்டுமே உயர்திணைப் பெயரில் அமையும். தனித்தனி உறுப்புகளாகப் பிரித்துவிட்டால் அவை அஃறிணைப் பொருட்களே.

மக்கள் தேவர் நரகர் உயர்திணை

மற்றுயி ருள்ளவும் இல்லவும் அஃறிணை நன்னூல் நூ. 26

பால்

பால் என்றால் பகுப்பு என்று பொருள்படும். இப்பால், ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்துவகைப்படும்.

இவற்றுள், ஆண்பால், பெண்பார், பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்கு உரியன. ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டும் அஃறிணைக்கு உரியன.

உயர்திணையில், ஆணைக் குறிப்பது ஆண்பால் எனவும், பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனவும், ஆண், பெண் இருபாலரையும் குறிப்பது பலர்பால் எனவும் அழைக்கப்படுகின்றன. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைக் கூட பலர்பால் எனப்படும்.

அஃறிணையில்,

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒன்றன்பால் எனப்படும்.

ஒன்றிற்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பலவின்பாலாகும்

மான், குயில், மரம் – ஒன்றன்பால்

மான்கள், குயில்கள், மரங்கள் – பலவின்பால்

இடம்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்

தன்மை – பேசுபவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் குறிக்கும்.

முன்னிலை – கேட்பவனையும் அவனைச் சார்த்தவர்களையும் குறிக்கும்.

படர்க்கை – பேசுபவனையும் கேட்பவனையும் அல்லாமல் வேறு ஒருவனைக் குறிக்கும்.

தன்மை – நான், நாங்கள்

முன்னிலை – நீ, நீங்கள்

படர்க்கை – அவன், அவர்கள்

காலம்

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலம் மூன்று வகைப்படும்.

இறந்தகாலம் – செயல் நடந்து முடிந்ததைக் கூறுவது.

நிகழ்காலம் – செயல் நடப்பதைக் கூறுவது.

எதிர்காலம் – செயல் நடக்க இருப்பதைக் கூறுவது.

Popular Feed

Recent Story

Featured News