10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் இனி ஆண்டுக்கு ஒரு தேர்வு என்ற முறையை மாற்றி பருவத் தேர்வு முறையை அமல்படுத்தலாம் என புதிய கல்வி கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் தேர்வுகளை ஒரே முறையாக எழுதாமல் வெவ்வேறு பருவங்களில், அதாவது செமஸ்டர் முறையில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் பொதுத் திறனறித் தேர்வுகள் நடத்தலாம் என்றும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது 10, 12ஆம் வகுப்புகளில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.
மேலும் தேசிய தேர்வு முகமை வலுவான அமைப்பாக மாற்றப்படும் என்றும் தேர்வு முகமையே மாணவர்களின் மதிப்பெண்கள் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மேல்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை எளிதாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.