Monday, June 3, 2019

10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. 52,400 ரூபாய் வரை சம்பளம் : நம்ம ஊரிலேயே நமக்கு காத்திருக்கும் அம்சமான வேலை.!


சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள 73 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகிறது.

1.பணியின் பெயர்: Xerox Operator

காலியிடங்கள்: 5

சம்பளவிகிதம்: ரூ.16,000 - 52,400

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆறு மாதம் Xerox Machine-ல் நகல் எடுக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Office Assistant

காலியிடங்கள்: 35



சம்பள விகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: Sanitary Worker (சுகாதாரப் பணியாளர்)

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

4.பணியின் பெயர்: Watchman

காலியிடங்கள்: 17

சம்பளவிகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

5.பணியின் பெயர்: Sweeper

காலியிடங்கள்: 3



சம்பளவிகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

6.பணியின் பெயர்: Masalchi

காலியிடங்கள்: 10

சம்பளவிகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

7.பணியின் பெயர்: Waterman (குடிநீர் வைப்பவர்)

காலியிடங்கள்: 1

சம்பள விகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

8.பணியின் பெயர்: Scavenger (கழிவறை சுத்தம் செய்பவர்)

காலியிடங்கள்: 1



சம்பள விகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்குமான வயது வரம்பு 1.1.2019 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

BC/ MBC பிரிவினர்களுக்கு இரண்டு வருடமும், SC/ ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடமும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மேலும் பிளஸ் 2/ பட்டப்படிப்பை முடித்த BC/ MBC/ SC/ ST பிரிவினர்களுக்கு உச்சவயது வரம்பு கிடையாது மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கும் உச்ச வயது வரம்பு கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சுய முகவரி எழுதப்பட்ட ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் கலை ஒட்டப்பட்ட தபால் கவர் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும்.



அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை நீதிபதி,
மாநகர உரிமையியல் நீதிமன்றம்,
சென்னை- 104

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 4.6.2019 மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

Popular Feed

Recent Story

Featured News