புதிய பாடத்திட்டம் தொடர்பாக முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் 11-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, பாடப்புத்தகங்கள் தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு இரு வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ""புதிய பாடத்திட்டம் தொடர்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி முதல்கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது.
பாடத்திட்ட தயாரிப்புக் குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு சென்னை, ஈரோடு, அரியலூர், நாமக்கல், மதுரை ஆகிய மண்டலங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சி 15 நாள்கள் நடைபெறும். தொடர்ந்து, இதர வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு வாரகாலம் பயிற்சி வழங்கப்படும். மாணவர்களுக்கு எளிதாக பாடங்களை கற்றுத் தர இந்த பயிற்சி உதவியாக இருக்கும்'' என்றனர்.