Tuesday, June 18, 2019

மத்திய அரசின் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 1,378 காலியிடங்கள்



மத்திய அரசின் கீழ் செயல்படும், ஒளிபரப்பு பொறியியல் சார்ந்த நிறுவனமான பி.இ.சி.ஐ.எல் (BECIL)-நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணிகளுக்கு 1,100 பேரும், தற்காலிக ஊழியர் பணிகளுக்கு 278 பேரும் ஒப்பந்த அடைப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.



பணிகள்:
திறன் சார்ந்த பணிகள் - 400
திறன் சாராத பணிகள் - 700
தற்காலிக ஊழியர் பணிகள் - 278

மொத்தம் = 1,378 காலியிடங்கள்



முக்கிய தேதிகள்:
திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.06.2019
தற்காலிக ஊழியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2019

ஊதியம்:
1. திறன் சார்ந்த பணிகள் - குறைந்தபட்சம் ரூ.9,381 மாதச் சம்பளமாக வழங்கப்படும். 2. திறன் சாராத பணிகள் - குறைந்தபட்சம் ரூ.7,613 மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
3. தற்காலிக ஊழியர் பணிகள் - குறைந்தபட்சம் ரூ.15,184 முதல் அதிகபட்சம் ரூ.20,072வரை சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:
பணிகளை பொறுத்து ஊதியத்தில் மாற்றங்கள் உண்டு.

வயது வரம்பு:
1. திறன் சார்ந்த பணிகள் - அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. திறன் சாராத பணிகள் - அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. தற்காலிக ஊழியர் பணிகள் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.



குறிப்பு:
பணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

பதிவுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.250

பதிவுக்கட்டணம் செலுத்தும் முறை:
பதிவுக்கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited, payable at New Delhi என்ற வங்கி கணக்கில் டிடி எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Shri Awadhesh Pandit
Dy. General Manager (F&A)
Broadcast Engineering Consultants India Limited,
BECIL Bhawan, C-56/A-17,
Sector-62, Noida- 201307 Uttar Pradesh



கல்வித்தகுதி:
1. திறன் சார்ந்த பணிகளுக்கு, குறைந்தபட்சமாக எலக்ட்ரிகல் டிரேட் மற்றும் வையர்மேன் போன்ற ஐடிஐ சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பை பயின்று குறைந்தபட்சமாக 2வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. திறன் சாராத பணிகளுக்கு - குறைந்தபட்சமாக எட்டாம் வகுப்பை பயின்று குறைந்தபட்சமாக 1வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3. தற்காலிக ஊழியர் பணிகளுக்கு - குறைந்தபட்சமாக 8 / 10 / 12 ஆம் வகுப்பை பயின்றவர்கள் முதல் அதிகபட்சமாக பட்டப்படிப்பு பயின்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.becil.com/vacancies - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் சென்றடையும்படி தபாலில் அனுப்ப வேண்டும்.



மேலும், இது குறித்த தகவல்களைப் பெற
https://www.becil.com/uploads/vacancy/MVVNL6june19pdf-b62b6683ca3777ea314610eb010fc1ac.pdf மற்றும் https://www.becil.com/uploads/vacancy/AIIMSNagpur29may19pdf-c6a760462e7b162b7b84e0e3d4d13c7b.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News