Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 20, 2019

பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் : பணியை தக்கவைக்க 15 மாணவர்களை சேர்த்துவிட நிர்பந்தம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கான இணைய தள விண்ணப்பம் மே 2-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் 1 லட்சத்து 72 ஆயிரத்து 581 இடங்களுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் மொத்தம் 74 ஆயிரத்து 601 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. 97 ஆயிரத்து 980 பொறியியல் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த ஆண்டு 5 சுற்றுகள்நடந்தகலந்தாய்வு முடிவில், சுமார் 47கல்லூரிகளில் ஒற்றை இலக்கில்மாணவர் சேர்க்கை நடந்திருப்பதும், 81 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் நிரம்பியதும், 268 கல்லூரிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களும், 150 பொறியியல் கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பின.அரசுப் பொறியியல் கல்லூரிகளில் சேரவே மாணவர்கள் ஆர்வம்காட்டும் சூழலில், தனியார்பொறியியல் கல்லூரிகளின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் ஒருசில தனியார் கல்லூரி நிர்வாகங்கள், புதிய உத்தியின் மூலம் மாணவர்களை சேர்க்க ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு இலக்கு நிர்ணயித்து, ஒவ்வொரு விரிவுரையாளரும் குறைந்தபட்சம் 15மாணவர்களையாவது கல்லூரியில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மட்டும் அவர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.



கள்ளக்குறிச்சியில் பிரபல கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான கல்லூரியில் பணிபுரியும்விரிவுரையாளர் ஒருவர் கூறும்போது, "போதுமான ஊதியம்இல்லை என்றாலும், கிடைத்த வேலையைக் கொண்டு குடும்பம்நடத்த வேண்டியிருந்ததால் இங்குபணி புரிகிறேன். தற்போது மேலும்ஒரு சுமையை சுமக்கச் சொல்லிநிர்பந்திக்கிறார்கள். நாங்களும்எங்கள் உறவினர்கள், நண்பர்கள் மூலம் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளோம். இருக்கின்ற பணியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் வேறு வழியின்றி இதைச் செய்கிறோம்'' என்று ஆதங்கத்துடன் கூறினார்.



விரிவுரையாளர்கள் ஆர்வம்:

இதுதொடர்பாக திருச்சியில்உள்ள பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் செல்வராஜூவிடம் கேட்டபோது, “பொறியியல் படிப்புக்கு வேலையில்லை என்ற மாயை ஏற்படுத்திவிட்டனர். உண்மையில் பொறியியல் படிப்புக்கு எப்போதுமே வேலை உண்டு. மாணவர்கள் படிக்கும்காலத்திலேயே திறனை வளர்த்துக் கொண்டால், அவருக்கு வேலைவாய்ப்பு மட்டுமல்ல தொழில்துறை அவரை உயர்த்திவிட வாய்ப்பு உள்ளது. எனவே இது சம்பந்தமாக விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தஉள்ளோம். கல்லூரி விரிவுரையாளர்களும் தங்கள் பங்குக்கு மாணவர்கள் சேர்க்கையில் ஆர்வம்காட்டிவருகின்றனர். மாணவர்களை சார்ந்துதான் அவர்களது எதிர்காலமும் இருப்பதால், அவர்களும் மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபாடு காட்டுவது, ஊர் கூடிதான் தேர் இழுக்க முடியும் என்பதை நினைவுப்படுத்துகிறது” என்றார்.

Popular Feed

Recent Story

Featured News