Friday, June 7, 2019

வேளாண் பல்கலை. சேர்க்கை: ஜூன் 17 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் 2019-ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புக்கு ஜூன் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2019-ஆம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 7-ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


ஆனால், நடப்பாண்டில் இளநிலை வேளாண் பாடப் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய ஜூன் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் ஜூன் 18 முதல் 20 வரை பிழை திருத்தம் செய்யலாம். தியாகிகளின் சந்ததி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் (5 சதவீதம்), வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவன உபயதாரர்கள் உள்பட சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 27-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News