Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 20, 2019

வரலாற்றில் இன்று 20.06.2019

ஜூன் 20 கிரிகோரியன் ஆண்டின் 171 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 172 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 194 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1631 – பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது.
1756 – கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர்.
1837 – விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார்.
1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.
1862 – ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.


1863 – மேற்கு வேர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவின் 35வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.
1900 – பொக்சர் படைகள் பீக்கிங்கில் நூற்றுக்கணக்கான ஐரோப்பியர்களைக் கொன்றனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன் கடல் சமர் அமெரிக்கக் கடற்படையின் பெருவெற்றியில் முடிவடைந்தது.
1960 – மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன.
1978 – கிறீசில் 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.
1990 – யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1991 – ஜெர்மனியின் தலைநகரம் பொன் இலிருந்து பேர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
2001 – பாகிஸ்தானின் அதிபராக பெர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார்.
2003 – விக்கிமீடியா அமைப்பு உருவானது.

பிறப்புகள்



1861 – ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 1947)
1939 – ரமாகாந்த் தேசாய், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1998)
1941 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. 2011)
1952 – விக்ரம் சேத், இந்திய எழுத்தாளர்
1954 – அலன் லேம்ப், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1967 – நிக்கோல் கிட்மேன், ஆத்திரேலிய-அமெரிக்க நடிகை
1971 – ஜோஷ் லுகாஸ், அமெரிக்க நடிகர்
1978 – பிராங்கு லம்பார்டு, ஆங்கிலேய காற்பந்து வீரர்
1984 – நீத்து சந்திரா, இந்திய நடிகை



இறப்புகள்

656 – உதுமான், முசுலிம் காலிப் (பி. 577)
1837 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (பி. 1765)
1966 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1894)
1971 – மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)
2005 – ஜாக் கில்பி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1923)
2006 – சுரதா, தமிழகக் கவிஞர்

சிறப்பு நாள்

உலக அகதிகள் நாள்
ஆர்ஜெண்டீனா – கொடி நாள்

Popular Feed

Recent Story

Featured News