Friday, June 28, 2019

ஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

குறைந்தபட்சம் ஒரு இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் அதில் ஓர் ஆண்டு பணிபுரிந்திருந்தால் மாறுதல் வழங்கலாம் என தடையாணை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவே மாறுதல் பெற விரும்பும் ஆசிரிய நண்பர்கள் அனைவரும் இன்று கடைசி நாள் என்பதால் மாறுதலுக்கான விண்ணப்பப் படிவத்தினை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம், அலுவலகத்தில் வாங்க மறுத்தால் தற்போது விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளுங்கள் மூன்றாண்டுகள் தளர்வு செய்யப்படாவிட்டால் திருப்பி விடுங்கள் என்று கூறி பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப்படிவத்தினை இன்றைக்கு 28.06.2019 மாலைக்குள் கொடுக்கவும்.

செய்தி பகிர்வு
2009&TET போராட்டக்குழு

Popular Feed

Recent Story

Featured News