Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 22, 2019

வரலாற்றில் இன்று 22.06.2019

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டின் 173 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 174 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 192 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1593 – குரொவெசியர்கள் சிசாக் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் துருக்கியர்களை வென்றனர்.
1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
1658 – போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
1783 – ஐஸ்லாந்தின் லாக்கி எரிமலையிலிருந்து வெளியேற்றிய நச்சு வளி பிரான்சின் ல ஹாவ்ரா நகரைத் தாக்கியது.
1812 – முதலாம் நெப்போலியன் ரஷ்யாவின் மீது போரை அறிவித்து முற்றுகையிட்டான்.
1815 – நெப்போலியன் பொனபார்ட் இரண்டாம் தடவையாக பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் அமர்ந்தான்.


1825 – பிரித்தானிய நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது.
1848 – பாரிசில் தொழிலாளர்களின் ஜூன் நாட்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1866 – ஆஸ்திரிய-புரூசிய போரில் ஆஸ்திரிய இராணுவம் இத்தாலிய இராணுவத்தைத் தோற்கடித்தனர்.
1893 – காம்பர்டவுன் என்ற ரோயல் கடற்படைக் கப்பல் ஒன்று விக்டோரியா என்ற பிரித்தானிய மத்தியதரைக்க் கடற்படைக் கப்பலுடன் மோதியதில் 358 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1898 – ஸ்பானிய-அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர்.
1911 – ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது.
1941 – கிழக்குப் போர்முனை: ஜெர்மனிப் படையினர் சோவியத் ஒன்றியத்தை முற்றுகையிட்டனர்.
1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
1962 – எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – கனடாவில் மரணதண்டனை தருவது நிறுத்தப்பட்டது.
1978 – புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.


1986 – மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனிய வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார்.
2002 – மேற்கு ஈரானில் இடம்பெற்ற 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 261 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1962 – க்ளைட் ட்ரெக்ஸ்லர், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1964 – டான் ப்ரவுன் ஆங்கில எழுத்தாளர்
1974 – விஜய், தென்னிந்திய நடிகர்

இறப்புகள்

1990 – ஈலியா பிராங்க், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)

Popular Feed

Recent Story

Featured News