Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 23, 2019

வரலாற்றில் இன்று 23.06.2019

ஜூன் 23 கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
1565 – மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டான்.
1658 – இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
1757 – இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
1758 – ஏழாண்டுகள் போர்: பிரித்தானியப் படைகள் ஜெர்மனியில் கிரெஃபீல்ட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
1760 – ஏழாண்டுகள் போர்: ஆஸ்திரியா புரூசியாவை வென்றனர்.
1794 – உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தாள்.
1868 – கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.


1894 – பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1919 – எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1942 – இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போர் விமானம் ஒன்று தவறுதலாக வேல்சில் தரையிறங்கியபோது கைப்பற்றப்பட்டது.
1945 – ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது.
1956 – கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.
1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1968 – புவெனஸ் அயரசில் உதைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 74 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
1990 – மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.



பிறப்புகள்

1889 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசிய கவிஞர் (இ. 1966)
1912 – அலன் டூரிங், ஆங்கிலேயெ கணிதவியலர் (இ. 1954)
1916 – லென் அட்டன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1990)
1924 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)
1937 – மார்ட்டி ஆட்டிசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1940 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)
1972 – ஜீனடின் ஜிதேன், பிரெஞ்சு காற்பந்து வீரர்
1980 – ராம்நரேஷ் சர்வான், கயானா துடுப்பாளர்
1980 – பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய தென்னிசு வீரர்



இறப்புகள்

1925 – சர் பி. தியாகராய செட்டி, திராவிட அரசியல் தலைவர், (பி. 1852)
1980 – வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1894
1980 – சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (பி. 1946)
1995 – யோனாசு சால்க், அமெரிக்க அறிவியலாளர் (பி. 1914)

சிறப்பு நாள்

பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்
எஸ்தோனியா – வெற்றி நாள்
போலந்து, நிக்கராகுவா, உகாண்டா – தந்தையர் நாள்

Popular Feed

Recent Story

Featured News