Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 27, 2019

வரலாற்றில் இன்று 27.06.2019

ஜூன் 27 கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1358 – துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1709 – ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான்.
1801 – கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.
1806 – புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1896 – ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
1950 – கொரியப் போரில் பங்கு பற்றவென ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.
1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.


1954 – உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
1957 – லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1967 – உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.
1974 – அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.
1977 – சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
2007 – டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.



பிறப்புகள்

1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (இ. 1968)
1922 – அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர்
1927 – டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், இதழாசிரியர்

இறப்புகள்

1999 – ஜோர்ஜ் பப்படபவுலஸ், முன்னாள் கிரேக்க அரசுத் தலைவர் (பி. 1919)
2007 – டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)
2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)

Popular Feed

Recent Story

Featured News