அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் கரணம் அங்குள்ள வளிமண்டல விளைவுதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது. பல இடங்களில் நிலவு உதயம் ஆகும் பொழுதும் மறையும் பொழுதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. சில இடங்களில் நடுவானில் நிலவு இருக்கும் பொழுது வெண்மையாய் தான் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.