Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 27, 2019

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்பு: ஜூலை 2-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இதில் முதல் கட்டமாக, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 18, 19 ஆகிய இரு தினங்கள் முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.


பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.சி.ஏ.-எல்.எல்.பி.ஆகிய மூன்று படிப்புகளிலும் மொத்தமுள்ள 362 இடங்களில், 136 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 226 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதியும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதியும் நடத்தப்படும்.
இதில் பங்கேற்க தகுதியுடையவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

Popular Feed

Recent Story

Featured News