Saturday, June 29, 2019

உ.வே.சா. உலகத் தமிழர் விருது: விண்ணப்பிக்க ஆக. 31 கடைசி

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை விருதுக்கான தலைப்பு சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு என்பதாகும். இந்தத் தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பிடிஎஃப் (pdf) வ டிவ ஆவணமாக suriyaudayam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த ஆய்வுரை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 22 -ஆம் தேதி அன்று, சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் விழாவில் விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் தொடர்புக்கு- 9360312519.

Popular Feed

Recent Story

Featured News