Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 21, 2019

தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம் 45 நிமிட வகுப்பில் பங்கேற்றால் தான் லைசென்ஸ்


இந்தியாவில் அதிக விபத்து நடக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் வேலூர் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேசமயம் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரிலும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள் கட்டாயம் 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்க வேண்டும்.


பங்கேற்று சான்று பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு வகுப்பு தமிழகத்திலேயே முதல்முறையாக வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சாலை விபத்துக்கள் எதனால் ஏற்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த சாலை விபத்துக்களின் வீடியோ தொகுப்பு, சாலைவிதிகள் என்ன? வாகனத்தில் வலது, இடது புறங்களில் திரும்பும்போது எந்த சிக்னல் செய்ய வேண்டும் என்று ஏராளமான விழிப்புணர்வு தொகுப்புகள் அடங்கிய வீடியோ எல்இடி திரை மூலம் காட்டப்பட்டு வருகிறது.

Popular Feed

Recent Story

Featured News