தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கான உதவி நிதி திட்டத்திற்கான கூடுதலாக 6 ஆயிரத்து 900 கோடி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவி நிதி வழங்கும் திட்டமான ரிது பந்து திட்டத்தின் கீழ் இதுவரை ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஏக்கருக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தி ஒரு ஏக்கருக்கு 5,000 ரூபாய் வழங்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்து அறிவித்துள்ளார். இந்த திட்டத்துக்காக கூடுதலாக 6 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரிது மற்றும் காரி பருவத்தில் ஒரு ஏக்கருக்கு 5,000 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது