Join THAMIZHKADAL WhatsApp Groups
2018 மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, மொத்தம் உள்ள 38.02 லட்சம் அரசு பணியிடங்களில் 31.18 லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் தெரிவித்துள்ளார். பணி மூப்பு, பதவி உயர்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளாகவும், விதிமுறைப்படி இந்த பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், 1,03,266 இடங்களை நிரப்புவதற்காக, போட்டி தேர்வுகளை நடத்த உள்ளதாகவும், ரயில்வே போர்டு, 1,56,138 இடங்களை நிரப்புவதற்கான பணிகளில் இறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.