Join THAMIZHKADAL WhatsApp Groups
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், தட்கல் மூலம் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 14 முதல் 28-ஆம் தேதி வரையிலும், முதலாம் ஆண்டுக்கான தொடக்க கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 15 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களும், தத்கல் மூலம் விண்ணப்பித்தவர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.