Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 22, 2019

ஜூலை 8 முதல் 15 வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பணி மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள், விண்ணப்பங்களை ஜூன் 28-ஆம் தேதிக்குள் கொடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 8-ஆம் தேதி வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.


இதைத் தொடர்ந்து ஜூலை 9 முதல் 15 வரை தொடக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.முன்னதாக இந்தக் கலந்தாய்வு ஜூன் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News