தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மறுவரையரை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் வார்டுகளுக்கு பகுதிக்கு எற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது ஜூலை 2ஆவது வாரத்தில் முழுமையாக முடிக்கப்படும் என்றும் உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அதோடு விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி மற்றும் கிராம ஒன்றியங்களில் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.