வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ வங்கியில் புதிய அக்கவுண்ட் துவங்குவதில் இருந்து பணம் எடுப்பது வரை அனைத்து வசதிகளையும் தெரிந்து கொள்வதோடு. அதனை உடனடியாகவும் செயல்படுத்த முடியும். உங்கள் வங்கிக்கணக்கின் பேலன்ஸ் குறித்த தகவல்களை வங்கிக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே எப்படி தெரிந்து கொள்ளலாம்
எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ் பாஸ்புக் வாங்க சிரமப்படவே வேண்டாம்! இதோ ஈஸி வழி. SBI Anywhere செயலியை டவுன்லோட் செய்து உங்கள் வங்கி கணக்கு குறித்து எல்லா தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பு எல்லாமே ஈஸி தான். எப்படி பார்க்கலாம்? : 'SBI Anywhere' செயலியை டவுன்லோட் செய்த பின்பு more ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதற்கு லாகின், பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை. உள்ளே சென்ற பின்பு உங்களின் பாஸ்புக் தகவல் உட்பட அக்கவுண்ட் விவரம் என அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். இந்த செயலில் ஆப்லைனிலும் செயல்படும் என்பது கூடுதல் தகவல்.