Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 5, 2019

தேர்ச்சி விகிதம் குறைகிறது: கைபேசி, கணினியில் மூழ்குவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் :கலெக்டர் அறிவுரை


வேலூர் மாவட்டத்தில் 2,698 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 3.72 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் ஈவேரா நாகம்மையார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

வேலூர் மாவட்ட அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கி கலெக்டர் ராமன் பேசியதாவது:


வேலூர் மாவட்டத்தில் 3,362 அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கி வருகின்றன.

இதில் 6.14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.




இந்த ஆண்டு 2,698 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.


இன்று மாணவ, மாணவிகள் கைபேசி, கணினியில் மூழ்கி தங்கள் கவனத்தை சிதறவிடுகின்றனர். இதனால் அவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது.


ஆகவே கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தமிழக அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக செய்து தருகிறது.



ஈவேரா மகளிர் பள்ளி முன்மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே வரும் ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் 171 பள்ளிகளில் எல்கேஜி ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்

Popular Feed

Recent Story

Featured News