அரசியல் கட்சி தலைவர்கள், அரசு ஊழியர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிடுவதை தடுக்க அந்த நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் படி சர்ச்சைக்குரிய ட்விட்டுகள், பயனாளர்களுக்கு தெரியாமல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிரிவினைகளை தூண்டும் விதமாக வெளியிடப்படும் ட்விட்டுகளை பயனாளர்கள் புகார்கள் செய்தால் அதன் மீது ட்விட்டர் தொழில்நுட்ப குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
1 லட்சம் பாலோயர்களுக்கு மேல் உள்ள கணக்குகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாள்தோறும் தனது ட்விட்டர் பதிவால் உலக அரங்கில் சலசலப்பை கிளப்பும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை குறி வைத்தே ட்விட்டர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.
சரச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள் எதிர்ப்பு கிளம்பும் போது அதனை தனது அட்மின் பதிவிட்டதாக கூறுவது வழக்கம். இனிமேல் அட்மினும் பதிவிட முடியாத வகையில் ட்விட்டர் விதிமுறைகளை மாற்றியுள்ளது.
இதே போல பேஸ்புக் நிறுவனமும் சில விதிமுறைகளை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.