நாம் வாழும் இந்த உலகில் நமக்கு தெரியாமல் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மேலும் அந்த அதிசயங்கள் எப்படி தோன்றுகின்றன? என்ற கேள்விகளும் நமக்குள் தோன்றுகின்றன. இந்த இயற்கை நமக்கு பல அதிசயங்களை கொடுத்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த அதிசயங்கள் நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் உள்ளது. ஒவ்வொரு அதிசயமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவில்தான் உள்ளது. அந்த அதிசயங்களில் இன்று நாம் பார்க்க இருப்பது வானில் தோன்றும் ஒளியைப் பற்றிதான்.
நார்வேயில் உள்ள ஹஸ்டாலன் பள்ளத்தாக்கின் மேலே இரவு மற்றும் பகல் நேரங்களில் வானில் திடீரெனத் தோன்றும், சரியாக விளக்க முடியாத ஒரு வித்தியாசமாக தோன்றும் ஒரு ஒளிதான் ஹஸ்டாலன் ஒளி (Hessdalen lights). இந்த ஒளி அந்த பள்ளத்தாக்கின் மேலாக மிதப்பது போல் தோன்றுவதால் தோற்றம் சரியாக அறியப்படாததாக உள்ளது. ஒரு வாரத்திற்கு 15 முதல் 20 வரை வானத்தில் இந்த மாதிரியான ஒளி அதிகம் தோன்றும்.
இந்த ஒளி தோன்றும்போது எந்தவிதமான சத்தமும் கேட்பதில்லை. மேலும் இது எவ்வாறு தோன்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து கூறுகின்றனர். இந்த ஒளியானது வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம், செம்மஞ்சள் எனப் பல்வேறு நிறங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் தோன்றியிருக்கின்றது. இதுவரை அதிகபட்சமாக 12கி.மீ நீளம் கொண்ட மஞ்சள் நிற ஒளி புகைப்படத்தில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சில சமயங்களில் அசாதாரண வேகத்துடன் அசைந்தும், சில சமயம் மிக மெதுவாக முன்னும், பின்னுமாக அசைந்தும் காணப்படுகிறது. வேறு சில சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசையாமல் இருப்பது போலவும் காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் அதாவது, இங்குள்ள பாறை மற்றும் நதியில் இருந்து வரும் ரேடான் அணுப்பிளவினால் ஏற்படும் ஒருவிதமான ஒளி என்று கூறப்படுகிறது.