உடல் பருமன் என்ற சொல் இப்போது ஒரு நோய் ஆகிவிட்டது. அதிலும், குழந்தைகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டது, உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் 22மூ சதவிகித குழந்தைகள் என்ற உடல் பருமன் பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது நமது உணவு முறைதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தை நல்ல எடையுடன் கொழுகொழுவென்று இருக்கவேண்டும் என்று கடைகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட ரெடிமேட் மிக்ஸ்களை வாங்கி தருகின்றனர்.
முன்பு வீட்டில், நமது கை பக்குவத்தில் அரைத்த சத்துமாவு தான் குழந்தைகளுக்கு உணவாக இருந்தது. ஆனால், இன்று கடைகளில் கிடைக்கும் பல்வேறு ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி தருகிறோம். அதில் குறிப்பிட்டது போல் வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. ஆனால், அதுவே நமக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.
சில கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து நாம் வாங்கிக்கொடுக்கும் உணவினால் எந்த பயனும் இல்லை. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இன்றைய அதிவேக கால ஓட்டத்தில் வீட்டிலேயே அனைத்து உணவுகளையும் தயாரிப்பது என்பது இயலாத காரியம் தான். தாய்மார்கள் வேலைக்கு செல்லும் வீட்டில் இது இன்னும் கடினம். இதற்கு சரியான தீர்வு நாம் வாங்கும் பொருளின் தரத்தை நன்கு ஆராய்ந்து வாங்குவதுதான். குழந்தை நல்ல எடையுடனும், பருமனாகவும் இருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.
வளர்ச்சி என்பது சரிவிகித உணவு, சரிவிகித வளர்ச்சி. குழந்தைகளுக்கு கொழுப்பு, புரதம் என்று அனைத்து சத்துக்களும் அவசியம். இதை பூர்த்தி செய்ய நவதானியங்கள் சேர்த்து அரைத்த சத்துமாவு ஒரு சிறந்த தேர்வு. நல்ல தரமான தானியங்களை சேர்த்து வீட்டிலேயே தயாரித்த நவதானிய சத்துமாவு இப்போது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் நேட்டிவ்ஸ்பெஷல் என்ற இணையதளம் சந்தைப்படுத்திவுள்ளது.