Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 23, 2019

தமிழக பள்ளிகளில் ‘முடக்கப்படும்’ தொழிற்கல்வி திட்டம்: திறன் படிப்புக்கு முக்கியத்துவம் குறைகிறது

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம் முடங்கி வருவதால், திறன் படிப் புக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் தொழில் திறன் மிகுந்தவர்களை உருவாக்க,1978-79-ல் 709 அரசு மேல்நிலைப்பள்ளி களில் தொழிற்கல்வி கொண்டுவரப் பட்டது. மொத்தம் 66 வகையான தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. அப்போது 1.14 லட்சம் மாணவர்களில் 24 ஆயிரம் பேர் தொழிற்கல்வியில் சேர்ந்தனர்.



தொடர்ந்து 2009-10-ல் பொது இயந்திரவியல், மின் இயந் திரங்களும் சாதனங்களும், மின் னணுசாதனங்கள், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும், வேளாண் செயல் முறைகள் உணவு மேலாண்மையும், குழந்தைகள் வளர்ப்பும், நர்சிங், அலுவலக செயலரியல், கணக்குப் பதிவியலும் தணிக்கையியலும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆட்டோ மெக்கானிக் என 12 வகையான தொழிற்கல்விப் பாடங் களாக குறைந்தன.தற்போது 2,700 அரசு மேல் நிலைப் பள்ளிகளில், 1,605-ல் மட்டுமே தொழிற்கல்வி கற்றுத் தரப்படுகிறது.அதிலும் 650-க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அந்தத் தொழிற் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டனர்.மேலும் தொழிற்கல்வி ஆசிரியர் கள் ஓய்வுபெற்றதும் அந்தப் பாடப் பிரிவு அப்படியே முடக்கப்படுகிறது.



தற்போது பணிபுரியும் ஆசிரியர் களில் பெரும்பாலானோர் இன்னும் 6 ஆண்டுகளில் ஓய்வுபெறும் நிலை யில் உள்ளனர். இதேநிலை தொடர்ந் தால் பள்ளிகளில் தொழிற்கல்வியே இல்லாத நிலை ஏற்படும்.இதுகுறித்து தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வியாளர்கள் அனைவரும் பள்ளிப்படிப்பிலேயே தொழிற் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் தமிழக அரசு 1955-ல் பள்ளிகளில் பொதுக் கல்வி, தொழிற்கல்வி என இரு முனைக் கல்வியை அறிமுகம் செய்தது.தொடர்ந்து 1965-66-ல் 10 மற்றும் 11-ம்வகுப்புகளில் தொழிற்கல்வி, பொதுக்கல்வி செயல்படுத்தியது. மேல்நிலைப் பள்ளிகளில் 1978-79-ல் தொழிற்கல்வியைச் செயல் படுத்தி 4,324 பகுதிநேர ஆசிரியர் களையும் நியமித்தது. பிறகு அவர்களை நிரந்தரமும் செய்தது.



தொடர்ந்து 2007-ல் 435 தொழிற் கல்வி ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நியமித்தது. அதன் பிறகு 12 ஆண்டுகளில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. மேலும் காலப்போக்கில் மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், செய்முறை (பிராக்ட்டிக்கல்) கல் விக்கான மதிப்பு குறையத் தொடங் கியது.கணிதம், அறிவியல் பாடப்பிரிவு களுக்கே மவுசு பெருகியது. உயர் கல்வியிலும் தொழிற்கல்வி மாண வர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பொறியியல் கல்லூரிகளில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

புதிய நியமனம் இல்லை

தனியார் பள்ளிகள் அதிகரித்த போதிலும், அங்கு தொழிற்கல்வி தொடங்கப்படவில்லை. அதே போல் அரசுப் பள்ளிகளிலும் தொழிற் கல்வி ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால், புதியவர்களை நியமிப்பதில்லை. புதிதாக பள்ளிகளுக்குத் தொழிற் கல்விக்கு அனுமதியும் தரவில்லை.



இதனால் பள்ளிகளில் தொழிற் கல்வியே இல்லாதநிலை உருவாகி யுள்ளது. தொழிற்கல்வியில்தான் திறன்மிக்கவர்களை உருவாக்க முடியும். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திறன்மிக்க வர்களை உருவாக்குவோம் என பிரதமர் மோடி கூறிவரும்நிலையில், தமிழகத்தில் தொழிற்கல்வித் திட்டம் முடங்கி வருகிறது என்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தொழிற்கல்வி ஆசிரியர் ஓய்வுபெற் றால், அந்தப் பாடப்பிரிவுகளில் மாணவர்களைச் சேர்க்க வேண் டாம் என அரசு தெரிவித் துள்ளது. தொழிற்கல்வி ஆசிரியர்கள்நியமனத்தையும் அரசு கைவிட் டுள்ளது’ என்றார்.

Popular Feed

Recent Story

Featured News