புதுக்கோட்டை,ஜீன்.3: புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறினார்.
புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பினை தொடங்கி வைத்துப் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற ஆண்டுகளில் எல்லாம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கல்வி ஆண்டு தொடக்கத்தில் ஜீன் மாதம் மேற்கொள்வதே வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியே நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம்.அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கி பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கை நடந்து வந்ததால் இன்று மாணவர்கள் சேர்க்கை
அதிகரித்துள்ளது.குறிப்பாக புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் முன் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி பிரிவில் 120 மாணவர்களை சேர்த்துள்ளனர். இன்னும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர்..இந்நிகழ்வை பார்க்க மகிழ்வாக உள்ளது.எனவே பெருங்களூர் அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களுக்கும்,மாணவர்கள் சேர்க்கை உயர காரணமான இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்..
பின்னர் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்..
நிகழ்வின் போது மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,பள்ளி தலைமையாசிரியர் பெ.ராஜ்குமார் உடன் இருந்தனர்.