Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 4, 2019

டெட்' தேர்வு நுழைவு சீட்டில் சான்றொப்பம் பெற உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்,'' என தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 8 முதல் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் 9ல் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு நுழைவு சீட்டினை இணையதளத்தில் 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.
ஆனால், பெரும்பாலானோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில், கையெழுத்தை மட்டுமே பதிவேற்றியுள்ளனர். எனவே இவர்களது ஹால் டிக்கெட்டிலும் புகைப்படம் இருக்காது.


புகைப்படம் இன்றி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் ஆகியுள்ளவர்கள் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் ஒட்டி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.
மேலும் கூடுதலாக ஒரு புகைப்படத்தை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, வருகை பதிவேட்டில் ஒட்டி, கையெழுத்திட வேண்டும்.
தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட தமது புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News