Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 22, 2019

பாடப்புத்தகங்கள் தாமதம் ஏன்?பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்


புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட பாடநூல்கள் அனைத்து வகுப்புகளுக்கும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
3,, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் இதுவரை முழுமையாக அச்சடிக்கவில்லை என்பது கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்தது.
ஏனெனில், 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இறுதி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டதால், புதிய பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவமானது மே மாதத்தில் தான் தமிழக பாடநூல் கழகத்திற்கு வழங்கப்பட்டது


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பாடநூல்களுக்கான சி.டி.க்கள் தயாரிக்கப்பட்டு பாடநூல் கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே, அச்சடிக்கும் பணிகள் தொடங்கும்.
இந்தநிலையில் தேர்தல் நடந்தது, எஞ்சியுள்ள 8 வகுப்புகளுக்கும் திடீரென நிகழாண்டே புதிய பாடநூல்கள் என அறிவிக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் தமிழகத்தில் பல இடங்களில் பாடநூல்கள் விரைவாக அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, சில நாள்களுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்கள் முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்

Popular Feed

Recent Story

Featured News