Join THAMIZHKADAL WhatsApp Groups
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல் மீன்வளப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நாகை, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சுக. பெலிக்ஸ் மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டார். பல்கலைக்கழகப் பதிவாளர் அ. சீனிவாசன், மாணவர் சேர்க்கை குழுத் தலைவர் சி.ஆ. சண்முகம் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் உடனிருந்தனர்.
ஜூலையில் கலந்தாய்வு: தற்காலிக தர வரிசைப் பட்டியல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் கூறியது: இளநிலை மீன்வள அறிவியல் பிரிவில் 151 இருக்கைகளும், இளநிலை மீன்வளப் பொறியியல் பிரிவில் 30 இருக்கைகளும், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல் பிரிவுகளில் தலா 40 இருக்கைகளும் உள்ளன.
இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், இளநிலை மீன்வளமாலுமி கலை தொழில்நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் பிரிவுகளில் தலா 20 இருக்கைகளும், இளநிலை தொழிற்கல்வி பிரிவில் 25 இருக்கைகளும் உள்ளன. நிகழாண்டில், இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 6,074 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டங்களிலிருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயனாளர் குறியீட்டை பயன்படுத்தி, இணையதளத்தில் தர வரிசைப் பட்டியலை பார்க்கலாம். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றார்.