Monday, June 3, 2019

நீர்ச்சத்து குறைபாடு எப்படி கண்டுபிடிப்பது?

கோடைக்காலம் முடிவுக்கு வந்தாலும் சென்னை போன்ற மாநகரங்களில் வெய்யிலின் தாக்கம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கவே செய்யும் என்கிறது வானிலை அறிக்கை.

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் நீரை பெண்களும், மூன்று லிட்டர் நீரை ஆண்களும் பருக வேண்டும்" என்று ஊட்டச்சத்து மருத்துவர்கள் சொல்கிறார்கள். சரி... நீர்ச்சத்து குறைப்பாடு என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சிறுநீர் அடர் நிறமாக இருந்தால், நீங்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.



அதுவே இயல்பான வெளிர் நிறத்தில் இருந்தால் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. வெயில் காலங்களில் கூடுமானவரை சூடான பானங்களை அருந்துவதை தவிர்த்து விடுங்கள். காபி, டீ போன்றவைகளுக்கு பதிலாக இளநீர்,மோர்,பழச்சாறு என்று அருந்தி வரலாம். வயதானவர்களை கூடுமானவரை வெய்யிலில் அனுப்பாதீர்கள். அப்படியும் அவசியம் ஏற்பட்டால், தனியே அனுப்பாமல் உடன் செல்லுங்கள்.

Popular Feed

Recent Story

Featured News