கடைநிலைப் பணியிடங்களையும் எழுத்து தேர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனியைச் சேர்ந்த உதயகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 8-ம் வகுப்பு முடித்து 1998-ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பிரிவில் பதிவு செய்தேன். எனக்குப் பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சேகர், காமயக்கவுண்டன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இரவுக் காவலராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த ஊராட்சி ஒன்றியச் செயலரின் நெருங்கிய உறவினர். இதனால் விதியை மீறி அவரை இரவுக் காவலராக நியமனம் செய்துள்ளனர். அவரது நியமனத்தைரத்து செய்து என்னை இரவுக் காவலர் பணிக்கு நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: சேகர் இரவுக் காவலராக நியமிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். 8 ஆண்டுகள் சேகர் இரவு காவலராகப் பணிபுரிந்துள்ளார்.
இதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் இந்த நியமனம் விதிப்படி நடைபெறவில்லை என்பதுதெரிகிறது. பொது நிர்வாகம் சிறப்பாக நடைபெற கடைநிலை பணியிடங்கள் நியாயமான முறை யில் நிரப்பப்படுவது அவசிய மானது. கடைநிலைப் பணியிடங் களில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்கின்ற னர். இது தடுக்கப்பட வேண்டும். கடைநிலைப் பணியிடங்கள் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப் படுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் பெரும்பாலான பணி நியமனங்கள் நடைபெறு கின்றன. இந்த நியமனங்களால் பொது நிர்வாகம் சிறப்பாக நடை பெறாது.
பரிந்துரை அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டோரிடம்நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? திறனற்ற நிர்வாகம் நாட்டின் முன்னேற்றத்துக்கு கரும் புள்ளியாக அமையும். எனவே, துப்புரவுப் பணியாளர், தோட்டப் பணியாளர், கிராம உதவி யாளர், சத்துணவு ஒருங்கிணைப் பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற கடைநிலை பணியிடங்களை எழுத்து தேர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டும். நேர்முகத் தேர்வுக்கான மதிப் பெண் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இதற்கான வழிகாட்டுதல்களைப் பிறப்பித்து ஜூலை 24-ல் நீதிமன்றத்தில் தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.