Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 19, 2019

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க!

iob personal loan interest : பொதுத்துறை வங்கியில் சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கும் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் என்றால் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனாகத் தருகிறது. வெளிநாட்டில் படிப்பதென்றால் இதன் வரம்பு ரூ. 20 லட்சம் ஆகும். ரூ. 4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 12.25 விழுக்காடு வட்டியும், ரூ. 4 லட்சம் அதற்கு மேற்பட்ட தொகைக்கு 13.50 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது (இது அவ்வப்போது மாறலாம்).



இதில் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை.

கடன் தொகை ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்டதாக இருக்குமானால், இந்தியாவில் படிப்பதென்றால் 5 விழுக்காடும், வெளிநாட்டில் படிப்பதென்றால் 15 விழுக்காடும் முன்தொகையாகச் செலுத்த வேண்டும் (இது மாறுதலுக்குட்பட்டது

திருப்பிச் செலுத்துவது எப்போது?

படிப்பு முடிந்த 6 முதல் 12 மாதங்களுக்கு பிறகு கல்விக் கடனை திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம். கடன் பெற்ற மாணவர்கள், சம அளவிலான மாதத் தவணைகளில் 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் கடனை செலுத்த வேண்டும்.



இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில், எம்.எஸ்.வேர்ட் (M.S.Word) ஆவண வடிவிலான கடன் விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை அச்செடுத்து, பூர்த்தி செய்து உங்களுக்கு அருகாமையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாரை அணுகலாம். அல்லது அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெறலாம்.

Popular Feed

Recent Story

Featured News