கிரெடிட் கார்டுகளை கையாளும் விசா, மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்களும், பேடிஎம் போன்ற பேமென்ட் நிறுவனங்களும் தங்கள் வசம் இருக்கும் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை வெளிநாடுகளில் பாதுகாப்பது குறித்து மத்திய அரசு அச்சம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி கடந்தாண்டு இந்த நிறுவனங்களுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. 'எக்காரணம் கொண்டும் டிக்கையாளர்கள் பரிமாறும் தங்களின் பணம் தொடர்பான டேட்டாக்களை இந்தியாவில் தான் பாதுகாக்க வேண்டும்' என்று கண்டிப்பாக தெரிவித்திருந்தது.
ஆனால், அப்படி சில நிறுவனங்கள் பின்பற்றுவதில்ல என்று தெரிகிறது. நேற்றுமுன்தினம் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், நிதி தொடர்பான தொழில்நுட்ப கம்பெனிகளை அழைத்து பேசினார். ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பரிமாறிக்கொள்ளும் நிதி தொடர்பான டேட்டாக்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் பாதுகாக்க வேண்டும். வெளிநாடுகளில் பாதுகாக்க கூடாது. அப்படி பாதுகாத்தால், இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு அமைப்புகளுக்கு தகவல்கள் பரிமாறிக்கொள்ள முடியாது.
இதை அமைச்சர் வலியுறுத்தினார். விசா, மாஸ்டர்கார்டு போன்ற கிரெடிட் கார்டு நிறுவனங்கள், பேடிஎம் போன்ற பேமென்ட் நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான பேர் பணம் பரிமாறிக்கொள்கின்றனர். இந்த டேட்டா பதிவுகள் எல்லாம் கம்ப்யூட்டர் சர்வர்களில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றை இந்தியாவில் தான் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீர்மானமாக உள்ளது. வருமான வரித்துறை, புலனாய்வு துறைகள் எல்லாவற்றுக்கும் பணம் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் கண்டிப்பாக முழுமையாக தெரிய வேண்டும். அவர்களுக்கு இந்த தகவல்கள் எளிதில் கிடைக்கும் வகையில் டேட்டாக்களை இந்தியாவில் பாதுகாக்க மத்திய அரசு புதிய கடுமையான சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
'பேமென்ட் நிறுவனங்கள் தரப்பில் பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். கடுமையான விதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் அச்சமுறக்கூடும். அதனால தங்களின் நிதி வர்த்தகம் பாதிக்கும் என்று தெரிவித்தனர். ஆனாலும், அரசுக்கு டேட்டா தகவல்கள் மிக முக்கியம். அப்படி இருந்தால் தான் புலனாய்வு அமைப்புகளுக்கு எளிதில் டேட்டாக்கள் கிடைக்கும். அதனால் பாதிப்பு இல்லாமல் விதிகளை மாற்றி புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி கூறினார்' என்று அரசு தரப்பில் அதிகாரிகள் கூறினர். வெளிநாட்டு பரிமாற்றம்; அரசு புது செக் பல்வேறு வகையில் சட்டவிரோத பண பரிமாற்றங்களை கண்டறிந்து ஒடுக்க அரசு தீவிரமாக உள்ளது.
இந்த வகையில், பேமென்ட் கம்பெனிகள் நடைமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு இந்த நிறுவனங்கள் உதவுகிறதா என்பதையும் கண்டறிய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. கிரெடிட் கார்டு, டேட்டா பாதுகாப்பு கடுமையான சட்டம் வருகிறது: அமைச்சர் உறுதி