Friday, June 28, 2019

மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.!


இந்திய கடற்படையில் பணிக்கான பிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் இணைய முறையில் விண்ணப்பிக்கலாம்.

பணி: மாலுமி
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்

காலியிடங்கள்:

1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் மொத்தம் 2,700 காலி பணியிடங்கள்

தேதிகள் குறித்த அறிவிப்பு:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.06.2019 (இன்று) ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2019

விண்ணப்பிக்க வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்புவோர் 01.02.2000 மற்றும் 31.01.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.




தேர்வுக்கட்டணம்:
ரூ.205

குறிப்பு:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது

2. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:

1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60%மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்,"https://www.joinindiannavy.gov.in/" என்ற இணையதள முகவரியில் சென்றுவிண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை:

1. கணினி வழித்தேர்வு 2. உடற்தகுதி தேர்வு 3. மருத்துவ தகுதி தேர்வு

பயிற்சிக் காலம்:

1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் 2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் -22 வாரங்கள்.

ஊக்கத்தொகை:
ஆரம்ப பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவுக்கு பின் சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News