Saturday, June 29, 2019

டிப்ளமோ, பிளஸ்டூ முடித்தவர்கள் விமானப்படையில் சேரலாம்!




இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்குபிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கையில் குரூப்-X மற்றும் குரூப்-Y ட்ரேடுகளில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிப் பணிகள்: ஏர்மேன் பணி
1. குரூப்-X ட்ரேடு பணி
2. குரூப்-Y ட்ரேடு பணி

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 01.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2019
ஆன்லைனில் தேர்வு நடைபெறும் தேதிகள்: 21.09.2019 முதல் 24.09.2019 வரை



வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்புவோர் 19.07.1999 மற்றும் 01.07.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.250

கல்வித்தகுதி:
1. குரூப்-X ட்ரேடு பணி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றோ அல்லது ஏதாவது ஒரு 3 வருட டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும். 2. குரூப்-Y ட்ரேடு பணி:10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://airmenselection.cdac.in/CASB/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழித்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஊக்கத்தொகை:
தொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.



பயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/MAIN%20ADVT%20ST-SEP%202019.pdf -என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News