Saturday, June 1, 2019

சித்தா, ஆயுர்வேதத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்


சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து பேசியதாவது:-
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் கட்டாயம். யோகா நேச்சுரல் படிப்புக்கு மட்டும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.


இந்தாண்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் 3,350 இடங்களும், முதுகலை படிப்பில் 508 இடங்களும் கூடுதலாகக் கிடைக்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, கடந்த வருடம் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்ற நிலையில் இந்த வருடமும் 12 ஆம் மதிப்பெண் அடிப்படையில் சித்தா படிக்கலாம் என நினைத்து நீட் தேர்வெழுதாத மாணவர்கள் மத்தியில் அமைச்சரின் இந்த அறிவிப்பு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News