Join THAMIZHKADAL WhatsApp Groups
கல்பனா சாவ்லா விருதிற்கு துணிவு மற்றும் வீரதீர சாகச செயல்கள் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் படிவங்களை பெறலாம். படிவங்களை பூர்த்தி செய்து ஜூலை 8ம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.