Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 5, 2019

விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி!


இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில், பயிற்சியுடன் கூடிய கமிஷன்டு அதிகாரி பணியிடங்களுக்கான அஃப்கேட் (AFCAT 2/2019) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அஃப்கேட் (AFCAT), என்சிசி (NCC) வீரர்களுக்கான சிறப்பு நுழைவு மற்றும் மிடியோரோலாஜி (Meteorology) போன்ற நுழைவுகள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். பயிற்சியுடன் கூடிய வேலைக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.




பணிகள்:

ஃபிளையிங் பிரிவு பணி
கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவு பணி
கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணி

மொத்த காலியிடங்கள் = 242



முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 01.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2019
AFCAT தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 24.08.2019 / 25.08.2019
பயிற்சி தொடங்கும் காலம்: ஜூலை -2020 முதல் வாரம்

தேர்வுக்கட்டணம்: ரூ.250

வயது வரம்பு: (01.07.2020 அன்று)

1. ஃபிளையிங் பிரிவில் அஃப்கேட் மற்றும் என்சிசி வீரர்களுக்கான குறைந்தபட்ச வயது 20 முதல் அதிகபட்சமாக 24 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

2. கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணிகளுக்கு குறைந்தபட்ச வயது 20 முதல் அதிகபட்சமாக 26 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

1. ஃபிளையிங் பிரிவு பணிக்கு, குறைந்தபட்சமாக ஏதேனும் ஒரு 3 வருட டிகிரி படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது 4வருட பி.இ / பி.டெக் பட்டப்படிப்பில் பயின்று 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
2. கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவு பணிக்கு, குறைந்தபட்சமாக 4வருட பி.இ / பி.டெக் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3. கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணிக்கு, குறைந்தபட்சமாக ஏதேனும் ஒரு 3வருட டிகிரி படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அதிஅகபட்சமாக 5வருட டிகிரியான எம்.பி.ஏ / எம்.சி.ஏ / எம்.ஏ / எம்.எஸ்சி போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் பயின்று 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.





விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், http://careerairforce.nic.in/அல்லது https://afcat.cdac.in/afcatreg/signup - என்ற இணையதள முகவரியில் சென்று
விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:

ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். அதுமட்டுமல்லாது உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, அஃப்கேட் தேர்வு, நேர்காணல் போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சி காலம்: 74 வாரங்கள். பயிற்சிக்குப்பின் பணி நியமனம் மற்றும் சலுகைகள் உண்டு.

மேலும், இது குறித்த தகவல்களை பெற,http://careerairforce.nic.in/tview3.asp?link_temp_id=550&lid=238 - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News