மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏதேனும் முக்கிய விவரங்களை குறிப்பெடுக்க பேப்பர் மற்றும் பேனாவை தேட முற்படும் சூழ்நிலையை நம்மில் பலரும் பலமுறை கடந்திருப்போம். பெரும்பாலும் மொபைல் போன் நம்பர், முகவரி உள்ளிட்ட விவரங்களை அழைப்பில் இருக்கும் போது குறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அழைப்பை துண்டிக்கக் கூடாது என்ற சிந்தனையிலேயே இதுபோன்ற எழுதும் பொருட்களை நாம் தேட முற்படுவோம்.
டையலரிலேயே நம்பரை குறிக்க நினைத்தால், அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அந்த நம்பர் மாயமாகி விடும். அழைப்பில் இருக்கும் போதே முக்கிய விவரங்களை குறித்துக் கொள்ள உங்களுக்கு பயன்தரும் சில செயலிகள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். இங்கு தொகுக்கப்பட்டு இருக்கும் செயலிகள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கானது என்பதை நினைவில் கொள்ளவும்.கால் ரைட்டர் (Call Writer)
இது ஒரு நிஃப்டி ஆப் ஆகும். இதனை பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ததும் செட்டிங்ஸ் மெனு செல்ல வேண்டும். இந்த ஆப்ஷன் திரையின் மேல்புறம் இடதுபக்கமாக காணப்படும். செட்டிங்ஸ் ஆப்ஷனில் உங்களது விருப்பத்தை அழைப்பின் போது எச்சரிக்கை வழங்க செட் செய்ய வேண்டும்.
பின் அழைப்பில் இருக்கும் போது செயலியின் ஐகானா தானாக திறக்கும். இனி செயலியை க்ளிக் செய்யும் போது குறிப்புகளை எடுக்க நோட்ஸ், நம்பர் போன்ற ஆப்ஷன்கள் தோன்றும். இவற்றை க்ளிக் செய்து விவரங்களை குறித்துக் கொள்ளலாம். பின் செயலியில் இருந்து நீங்கள் குறித்து வைத்த விவரங்களை எடுத்துக் கொள்ளலாம். அன்றாட பணியில் அதிகளவு குறிப்பு மற்றும் எண் சார்ந்த விவரங்களை இயக்குவோருக்கு கால் ரைட்டர் சிறப்பான செயலியாக இருக்கும்.
ரைட் நௌ (Write Now)
பிளே ஸ்டோரில் கிடைக்கும் மற்றொரு இலவச செயலி இது. இந்த செயலி கால் ரைட்டர் செயலியை போன்றே இயங்கும். எனினும், இது சற்று வித்தியாசமாக தெரியும். செயலியை இன்ஸ்டால் செய்ததும், ரீஜியன் டெஸ்ட் செய்ய வேண்டும். இது நீங்கள் எவ்வளவு சரியாக ஸ்வைப் செய்தால் விட்ஜெட்டை கொண்டு வரும் என்பதை தீர்மானித்துக் கொள்ளும்.
இந்த விட்ஜெட் பென்சில் வடிவில் இருக்கும். இதனை இடதுபுறமாக ஸ்வைப் செய்தால் செயலி திற்ககும். இனி நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டிய விவரங்களை பதிவிடலாம். பின் செயலியை திறந்து குறித்து வைத்த விவரங்களை பயன்படுத்தலாம்.
கலர் நோட் (Color Note)
கலர் நோட் அழைப்புகளுக்கென்றே உருவாக்கப்பட்ட செயலி ஆகும். ஆப் ஸ்டோரில் கிடைக்கும் குறிப்பு எடுக்கும் செயலிகளில் இது மிகவும் பிரபலம். அழைப்புகளை இயர்போன் வாயிலாக மேற்கொள்வோர் செயலியின் ஐகானை க்ளிக் செய்து குறிக்க வேண்டிய விவரங்களை பதிவிட்டுக் கொள்ளலாம். இதுதவிர கலர் நோட் செயலியில் மெமோக்கள், மின்னஞ்சல்கள், மளிகை விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து கொள்ள முடியும். இத்துடன் ரிமைண்டர் செட் செய்து கொள்ளலாம்.
ஸ்கிரீன் ஆன் கால் (Screen On Call)
இது குறிப்புகளை எடுக்கும் செயலி இல்லை என்றாலும், அழைப்பில் இருக்கும் போது இந்த செயலி பயன்தரும் ஒன்றாக இருக்கும். ஸ்கிரீனை காது அருகில் கொண்டு வரும் போது ஸ்கிரீன் தானாக ஆஃப் ஆகிவிடும். இந்த செயலி இவ்வாறாகாமல் பார்த்துக் கொள்ளும். அழைப்பின் போது தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் போது இது பயன்தரும்.