Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 21, 2019

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு,போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கோடை கால பயிற்சி முகாம் தொடக்கம்


விபத்துக்களை தவிர்க்கும் முறையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பயிற்சி வழங்கும் கோடை கால முகாம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பெருகி வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் சிக்குபவர்களில் இளைஞர்களே அதிகமாக உள்ளனர்.
இதை தவிர்க்கவும் பள்ளி பருவத்திலிருந்தே மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குவது, போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடிப்பது போன்றவற்றை அறிந்து கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது போக்குவரத்து பயிற்சி பூங்கா.


சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் அருகே மாநகராட்சி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பூங்கா கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் வருகின்ற 25ஆம் தேதி வரையில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதையடுத்து சென்னை மாநகராட்சியுடன் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து இந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மாணவர்கள் ஹெல்மட் அணிந்து சைக்கிள் ஓட்டவும், சிறிய அளவிலான கியர் பைக் ஓட்டவும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதையடுத்து சாலைகளை கடக்கும் போது எவ்வாறு சிக்னல்களை கவனிக்க வேண்டும், சாலைகளில் உள்ள குறியீடுகளுக்கான அர்த்தம் என்ன என்பதும் மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது. மேலும் சாலை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.


இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் இருசக்கர வாகனம் ஓட்டவும் இங்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது.
சாலை விதிகளையும் போக்குவரத்து விதிகளையும் பள்ளி மாணவர்கள் சிறு வயது முதல் கற்பதால் எதிர் காலத்தில் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பது அரசின் எதிர்பார்ப்பாகும்

Popular Feed

Recent Story

Featured News