Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 26, 2019

கணினி ஆசிரியர் மறுதேர்வு: தேர்வர்களின் மின்னஞ்சலுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பிவைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கணினி ஆசிரியர் மறுதேர்வுக்கான நுழைவுச் சீட்டு தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான கணினி ஆசிரியர் (நிலை 1) பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு முதல்முறையாக ஆன்லைன் தேர்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கணினி சர்வர் பிரச்னை காரணமாக தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாத தேர்வர்களுக்கு மட்டும் வியாழக்கிழமை மறுதேர்வு நடைபெறவுள்ளது.


இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 23-ஆம் தேதி நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தேர்வு மையங்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்(www.trb.tn.nic.in)
வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாத தேர்வர்களுக்கு மட்டும் வரும் 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) மறுதேர்வு நடைபெறும்.
என்னென்ன எடுத்து வர வேண்டும்?: மறுதேர்வுக்கான தேர்வு மைய விவரத்துடன் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Admit Card) ) விண்ணப்பதாரர்களால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை அச்சுப் பிரதி எடுத்து தேர்வு மையத்துக்கு நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்துவர வேண்டும்.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News