தற்போது அரசிடம் நாம் பெற வேண்டிய எந்த சான்றிதழையும் நேரில் சென்று அலைந்து கொண்டிருக்காமல் வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் சுலபமாகப் பெற முடியும் நம்மில் எத்தனை பேர் அறிவோம். நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர வளர அரசு இயந்திரமும் வேறு வழியின்றி தன்னை காலத்தோடு இயைந்து முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது கட்டாயம் என்பதை திட்டமிடும் அதிகாரிகள் புரிந்து கொண்டு விட்டதுபோல் தோன்றுகிறது, முன்பெல்லாம் தமிழக அரசின் ஒர்சான்றிதழை நாம் பெற வேண்டும் என்றால் வி.ஏ.ஓ/ஆர்.ஐ/ தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று மணிக்கணக்கில் காத்திருந்து நின்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், தொடர்ந்து பலமுறை அங்கு சென்றால் தான் சான்றிதழ் வாங்க முடியும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு சம்பளம் அரசு கொடுத்தாலும் நாம் கொஞ்சம் 'கிம்பளம்' கொடுத்தாக வேண்டும். 'கொடுத்தா தான் வேலை நடக்கும்' - இதை நாம் அங்கு அடிக்கடி கேட்டிருப்பதுண்டு. ஆனால், விண்ணப்பக்கட்டணம் தவிர, வேறு எந்த செலவும் இன்றி, நேரில் சென்று அலைக்கழியாமல் இருந்த இடத்தில் இருந்தே இன்றைய நாட்களில்நாம் சான்றிதழ்களைப்பெற முடியும். கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் தயவு செய்து இந்த செய்தியை அவர்களுக்கு வேண்டியவர்களிடம் பகிர்ந்து கொண்டு நமக்கு வேண்டியவர்கள் பெற உள்ள சிரமத்தைக் குறைப்போம்.
இதன் மூலம் சிறிய அளவில் சமூக சேவை செய்ய நமக்கு வாய்ப்பிருப்பதாக கருதி இதை பிறருக்கும் பகிருங்கள் நண்பர்களே! உதாரணமாக வாரிசு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக பெறுவது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான TNeGA எனும் இணையதளத்தில் சென்று முதலில் உங்களுடைய ஐடி மற்றும் பாஸ்வேர்டை இட வேண்டும்.அதில், இடது பக்கத்தில் 'சர்வீசஸ்'என்ற பகுதி இருக்கும்.
அதில், 'Department' என்ற ஆப்ஷனில் 'Revenue Department' எனபதை கிளிக் செய்யவும். அதற்கு கீழ் வருவாய்துறையின் கீழ் உள்ள சேவைகள் அடங்கிய பட்டியல் வெளிவரும். அதில், 'REV 114 - Legal Heir Certificate' என்பதை கிளிக் செய்யவும். இதை அடுத்து என்னென்ன ஆவணங்கள் தேவை? விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்த விபரங்கள் வரும். தொடர்ந்து அடுத்த வரும் விண்டோவில், முதலில் நிலப்பதிவு பத்திரம் குறித்த தகவல் கேட்கும். Land registration செய்த போது கிடைத்த CAN number- யை உள்ளிட வேண்டும். அதைத்தொடர்ந்து யார் வாரிசு சான்றிதழ்விண்ணப்பிக்கிறார்களோ அவர்களது மொபைல் நம்பரை அளிக்க வேண்டும்.
OTP யுடன் சரிபார்த்தபிறகு அடுத்த விண்டோ திறக்கும். அதில், இறந்தவரின் விபரங்கள், நீங்கள் இறந்தவருக்கு என்ன உறவு? இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெறும் நபரின் விபரங்கள், அடையாள அட்டை, முகவரிக்கான அடையாள அட்டை ஆகியவை குறித்த விபரங்களை அளிக்க வேண்டும். அனைத்து விபரங்களும் அளிக்கப்பட்ட பிறகு, உங்களுக்கான விண்ணப்ப எண் வரும். அதனை சேமித்து வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து, உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை விண்ணப்ப எண்ணை தளத்தில் உள்ளீடு அறிந்துகொள்ள முடியும். விண்ணப்பித்து 15 முதல் 20 நாட்களுக்குள் நீங்கள் வாரிசுச் சான்றிதழை அந்த பக்கத்திலேயே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வாரிசு சான்றிதழ் மட்டுமின்றி,பிறப்புச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,விதவைச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், குழந்தையின்மை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அரசு தொடர்பான சான்றிதழ்களையும் இந்த இணையதளத்தின் மூலமாக பெற பெற முடியும். அதாவது தற்போது அனைத்தும் நம் விரல்களுக்குள் வந்து விட்டது, நம் ஸ்மார்ட் ஃபோன் மூலம். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம். நிம்மதியாக வாழ்வோம்.