Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 23, 2019

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்கும்: செங்கோட்டையன்

தமிழகத்தின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவு செய்யாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திருப்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் அமைச்சர் செங்கோட்டையன். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:



அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் இன்றைக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பது எங்குமே இல்லை. இதுதொடர்பாக நாங்கள்ஆய்வு செய்துள்ளோம். அரசுப் பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக சில இடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் உண்மையில்லை.செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியொன்றில் தண்ணீர் வசதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கும்போதே,அவர்கள் அனைத்து வசதிகளையும் செய்திருக்க வேண்டும். அவ்வாறு வசதிகள் நிறைவேற்றப்படாமல் தனியார் பள்ளிகள் இருந்தால், அவற்றை அரசே ஏற்று நடத்தும்.அத்தகைய தனியார் பள்ளிகளை ஏற்று நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ளும்’’.இவ்வாறு தெரிவித்தார் செங்கோட்டையன்.

Popular Feed

Recent Story

Featured News