ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
உணவுப் பொருள்களுக்கான மானியம் ரூ.1.45 லட்சம் கோடியைத் தொட்டுவிட்டது. மானியத் திட்டத்தின்கீழ் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3-க்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.
உணவுப் பொருள்கள் கொள்முதல் விலை அதிகரித்தபோதும், இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. உணவுப் பொருள்கள் மானிய விலையில் தொடர்ந்து ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தால் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்பவர்கள் அங்கும் உணவுப் பொருள்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று உணவு தானியங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. அவை நியாய விலைக் கடைகள் மூலம் ஏழைகளுக்கு சென்று சேர்கின்றன என்றார் பாஸ்வான்.